சென்னை மாம்பலத்தில் கல்லால் அடித்து வாலிபர் படுகொலை

சென்னை மாம்பலத்தில் முன்விரோதத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-12 11:05 GMT
ஏ.சி. மெக்கானிக்

சென்னை மேற்கு மாம்பலம், திருவீதி அம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் கண்ணன். இவர், மாநகராட்சி துப்புரவு பணியாளராக உள்ளார். இவருடைய மகன் கோகுல் (வயது 22) .ஏ.சி.மெக்கானிக்காக தொழில் செய்து வந்தார். திருமணம் ஆகாதவர்.

நேற்று பகலில் கோகுல், மேற்கு மாம்பலம் ரெட்டிகுப்பம் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அங்கு வந்து கோகுலிடம் தகராறு செய்து சண்டைபோட்டனர்.

கல்லால் அடித்து கொலை

அவர்கள் கோகுலை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து தாக்கினார்கள். கோகுல் அங்கேயே மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் கோகுல் பரிதாபமாக இறந்து போனார். கோகுலை தாக்கியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக அவருடைய தந்தை, குமரன் நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

குமரன் நகர் போலீசார் விரைந்து வந்து கோகுலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கோகுலை தீர்த்துக்கட்டிய 2 பேரை கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் அடையாளம் கண்டனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக சஞ்சய், சகாயஜெபஸ்டின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்