பனவடலிசத்திரம்: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Update: 2022-02-11 21:05 GMT
பனவடலிசத்திரம்:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 55). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சண்முகையா (47) என்பவருக்கும் தோட்டத்தில் குழாய் அமைப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காளியம்மன் தனது தோட்டத்தில் கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகையா மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் காளியம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகையாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்