நெல்லை, தென்காசியில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை தென்காசியில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

Update: 2022-02-11 19:52 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 557ஆக அதிகரித்துள்ளது. நேற்று 395 பேர் உள்பட இதுவரை 61 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 935 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 444 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 198 பேர் உள்பட இதுவரை 31 ஆயிரத்து 833 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 357 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 490 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 238 பேர் உள்பட இதுவரை 63 ஆயிரத்து 893 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 85 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 445 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்