அகழ்வாராய்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்
வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
தாயில்பட்டி,
கீழடி போன்று தமிழர்களின் வரலாற்று பெருமை தெரிந்து கொள்வதற்காக சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பணிகள் நேற்று தொடங்கியது. வெம்பக்கோட்டை மேட்டுக்காடு என்ற பகுதியில் 5 மீட்டர் அகலமும், 5 மீட்டர் நீளமும் அளவீடு செய்யப்பட்டு 12 குழிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த பணிகளை அகழ்வாராய்ச்சி இயக்குனர் பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.