கவுன்சிலர் பதவி ரூ.2½ லட்சத்துக்கு ஏற்கனவே ஏலம் விடப்பட்டதா?

விருதுநகர் மாவட்டத்தில் கவுன்சிலர் பதவி ரூ.2½ லட்சத்துக்கு ஏற்கனவே ஏலம் விடப்பட்டதா? என நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-02-11 19:09 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு பசும்பொன் தெருவில் வசிக்கும் மகேந்திரன் என்பவர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-  வ.புதுப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டில் கவுன்சிலர் பதவி வழக்கமாக ஏலம் விடப்படுகிறது. அதே முறையில் இம்முறையும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் எடுத்தவர் சுயேச்சையாக போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யக்கூடாது என்று முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் மனு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நான் மனுதாக்கல் செய்தேன். ஆனால் பின்னர் அவர்கள் பேசி முடித்து மனுவை வாபஸ் வாங்குமாறு என்னை மிரட்டினர். ஆனால் நான் மனுவை வாபஸ் பெறவில்லை. ஒவ்வொரு முறையும் பணபலம், ஆள்பலம் உள்ளவர்களே இந்த வார்டில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்