புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-02-11 18:43 GMT
புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்குகள்
மதுரை விஸ்வநாதபுரம் பார்க் மெயின் ரோட்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் இரவுநேரத்தில் வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகள் நடந்து வரும் இந்த சாலையில் தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணாபுரம் காலனி.
நாய்கள் தொல்லை
மதுரை வில்லாபுரம், அண்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றது. பகலில் கூட்டமாக சேர்ந்து சாலைகளில் சுற்றுகிறது. இரவில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.                      சிவா, மதுரை.
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வ.உ.சி. ரோட்டில் கடைகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளது. இந்த கடைகளால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் தினமும் இந்த சாலையில் தினமும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், காரைக்குடி.
காட்சி பொருளான மின்விளக்கு 
மதுரை கோவில் பாப்பாகுடியில் உள்ள மயானம் அருகே உள்ள மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள விளக்கு பலநாட்களாக எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் பாம்புகள் உள்பட விஷஜந்துகள் அதிக அளவில் நடமாடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத தெருவிளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாலசுந்தரம், கோவில் பாப்பாகுடி.
போக்குவரத்து நெரிசல் 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தலாம்மன் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.                    பொதுமக்கள், வத்திராயிருப்பு. 
சேதமடைந்த சாலை
மதுரை சிம்மக்கல்லில் இருந்து ெபரியார் பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பழ மார்க்கெட் பகுதியில் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சேதமடைந்த சாலையால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- செல்வி, சிம்மக்கல்.

மேலும் செய்திகள்