வேலூர் கோட்டை பூங்காவில் குழுக்களாக அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய கல்லூரி மாணவர்கள்

வேலூர் கோட்டை பூங்காவில் கல்லூரி மாணவர்கள் குழுக்களாக அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதினர்.

Update: 2022-02-11 18:42 GMT
வேலூர்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி வேலூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் முறையில் தேர்வு எழுதி வருகின்றனர்.
 
அதன்படி வேலூர் ஊரீசு கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் வேலூர் கோட்டை பூங்காவில் பல்வேறு குழுக்களாக அமர்ந்து செமஸ்டர் தேர்வு எழுதினர். மேலும் பிற கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை கல்லூரியில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்