திருப்பத்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ1.20 லட்சம் பறிமுதல்
திருப்பத்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதை யொட்டி தனிப்படை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் -கிருஷ்ணகிரி மெயின் ரோடு கசிநாயக்கன்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சேகர் (வயது 30) உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வைத்திருந்தார். விசாரணையில் செல்போன் கடை நடத்தி வருவதாக கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் ஜெயராமராஜாவிடம் ஒப்படைத்தனர்.