எவர்சில்வர் வாளிகள் பறிமுதல்
காரைக்குடியில் எவர்சில்வர் வாளிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்குடி,
காரைக்குடியில் உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை பிரிவை சேர்ந்த போலீசார் வ.உ.சி. சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்குடியில் இருந்து திருமயம் நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் இருந்த 250 எவர்சில்வர் வாளிகள், ரூ.51 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அந்த காரில் வந்த பாலசுப்பிரமணியன் சரியான தகவலை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. எனவே அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.