ஓச்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
ஓச்சேரியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலிசார் நேற்று ஓச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள இரண்டு பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டு கடைகளில் இருந்தும் தலா 10 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலிசார் வழக்கு பதிவு கடை உரிமையாளர்கள் கலவை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (30), ஓச்சேரி பகுதியைச் சேர்ந்த இக்பால் (49) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.