மறவமங்கலத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

மறவமங்கலத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2022-02-11 18:09 GMT
காளையார்கோவில்,

 காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் புறக்காவல் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. புறக்காவல் நிலையத்தை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் திறந்துவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காளையார்கோவில் போலீஸ் நிலையம் எல்லை பகுதி 30 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து விரிந்து இருப்பதால் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறவும், குற்றவாளிகளைக் கண்காணிக்கவும், துரித நடவடிக்கை எடுப்பதற்காகவும் பொதுமக்கள் நலன் கருதி மறவமங்கலத்தில் புதிதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் காளையார்கோவிலிலிருந்து மறவமங்கலம் பகுதியை தனியாக பிரித்து புதிதாக காவல் நிலையம் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த புறக்காவல் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.
 இவ்வாறு அவர் கூறினார். 
விழாவில் சிவகங்கை துணை சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி, மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், கவுன்சிலர் நாகவள்ளி மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மறவமங்கலம்-இளையான்குடி சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிலிருந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்வலமாக புறக்காவல் நிலையம் திறக்கும் இடத்தை வந்தடைந்தனர்.

மேலும் செய்திகள்