பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

திண்டிவனத்தில் பதற்றமான 7 வாக்குச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தாா்.

Update: 2022-02-11 17:17 GMT
திண்டிவனம், 

திண்டிவனத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் அந்தந்த வார்டுகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும் தேர்தலின்போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது திண்டிவனம் ஏ.டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா, நகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான சவுந்தரராஜன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்