தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-11 16:56 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையை ஆக்கிரமிக்கும் மணல்
தேனி அரண்மனைபுதூரில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் மணல் பரவி கிடக்கிறது. இவ்வாறு மணல் பரவி கிடப்பது தெரியாமல் இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமித்திருக்கும் மணலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உமையராஜன், தேனி.
சேதமடைந்த நிழற்குடை
பழனி அருகே மானூர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் நிழற்குடைக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. அப்போது பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அறிவாசன், மானூர்.
சாலையோரத்தில் வளரும் செடிகள்
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை ஊராட்சி கோம்பையன்பட்டியில் உள்ள சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த சாலை குறுகலான சாலையாக மாறி வருகிறது. மேலும் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை ஆக்கிரமிக்கும் செடி-கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆரோக்கியசாமி, கோம்பையன்பட்டி.
ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
பெரியகுளம் ஊராட்சி பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அந்த தொட்டியின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டியை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விசுவநாதன், பொம்மிநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்