தாய் மீதான பாசத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் திருமண விழாவில் திடீர் பரபரப்பு

தாய் மீதான பாசத்தில் திருமணத்தை மணப்பெண் திடீரென நிறுத்தினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Update: 2022-02-11 16:52 GMT

நெல்லிக்குப்பம்,

கடலூா் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலுக்கு வெளிப்பகுதியில் சாலையில் வைத்து திருமண விழாக்கள் நேற்று பரபரப்புடன் நடந்து கொண்டிருந்தது.

 அப்போது அங்கு வந்திருந்த மணப்பெண் ஒருவர் திடீரென தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதை சற்றும் எதிர்பாராத மணமகன் மற்றும் அங்கிருந்த சொந்தபந்தங்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். 

இதையடுத்து, மணமகளிடம் ஏன் திருமணம் வேண்டாம் என்று கூறுகிறாய் என்று அங்கிருந்தவர்கள் கேட்டனர். அப்போது, கண்களில் தண்ணீர் தழும்ப தனது தாயை பார்த்து,நான் எனது தாயுடன் தான் இருக்க விரும்புகிறேன், என்னால் அவரை விட்டு வர முடியாது என்று தெரிவித்தார்.

தாயுடன் இருக்க விருப்பம்

 இதன் பின்னர் தான் அங்கிருந்த மணமகன் உள்பட அனைவரும் சற்று நிம்மதி அடைந்தனர். மகளின் பாசத்தை பார்த்த தாயும் கண்கலங்கினார். தொடர்ந்து, அந்த மணப்பெண்ணிடம், அவரது பெற்றோர், திருமணத்துக்கு பின்னரும் உன்னோடு தான் நாங்கள் எப்போதும் இருப்போம் எனவே அதை எண்ணி அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறி மணமகளை ஆசுவாசம் படுத்தினர். 

இதையடுத்து அவர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து மணமகனும், மணமகளின் கழுத்தில் மாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொண்டார். தாய், மகளின் பாச போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்