கழுத்தை இறுக்கி தொழிலாளி படுகொலை; மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் வாலிபர் வெறிச்செயல்
திண்டுக்கல்லில், மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 34). கியாஸ் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக்ராஜாவை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் அவர் மட்டும் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை வேடப்பட்டி மயானம் அருகே கார்த்திக்ராஜா பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
போலீசார் விசாரணை
அப்போது அவருடைய கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளம் இருந்தது. எனவே அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவில் கார்த்திக்ராஜா மற்றும் ஒரு வாலிபர் அந்த பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கழுத்தை இறுக்கி கொலை
பின்னர் கார்த்திக்ராஜாவுடன் நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவரிடம் பேசியது கார்த்திக்ராஜாவின் வீட்டருகே வசிக்கும் சக்திவேல் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் அவர் தெரிவித்தார். அதாவது, மனைவிகளை பிரிந்து தனியாக வசித்து வந்த கார்த்திக்ராஜா, சக்திவேலின் மனைவியிடம் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து அறிந்ததும் ஆத்திரமடைந்த சக்திவேல், கார்த்திக்ராஜாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு அவரை சந்தித்த சக்திவேல், இருவரும் ஒன்றாக மது அருந்தலாம் என்று கூறி அவரை வேடப்பட்டி மயானம் அருகே அழைத்து சென்றார். பின்னர் சிறிது நேரம் அவரிடம் பேச்சுக்கொடுத்த சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த கயிற்றால் கண்இமைக்கும் நேரத்துக்குள் கார்த்திக்ராஜாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.