மேலும் 19 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2022-02-11 16:02 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. நேற்று மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 785 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று 238 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 63 ஆயிரத்து 893 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 447 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது முதியவர் ஒருவர் கொரோனா காரணமாக இறந்து உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 445 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்