நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் கூடாது - தமிழக அரசு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-02-11 09:37 GMT
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில்,  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கபட்டுள்ள நிலையில் விடுப்பு எடுக்கும் தொழிலாளர் எவருக்கும் சம்பள பிடித்தமோ சம்பளக் குறைப்போ இருக்க கூடாது எனவும், உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்