ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து: நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பூந்தமல்லி அருகே ஓட்டல் உரிமையாளர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். இச்சம்பவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை,
பூந்தமல்லியை அடுத்த தி௫மழிசையில் ஓட்டல் உரிமையாளர் மகாராஜன் கடந்த 6-ந் தேதி மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கு காரணமான உண்மை குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை பெற்று தர கோரியும், நாடார் சமுதாய வியாபாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரியும் நேற்று பூந்தமல்லியை அடுத்த தி௫மழிசை பகுதியில் அவரது ஓட்டல் முன்பாக நாடார் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மின்னல் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், நாடார் மகாஜன சங்கதலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் புழல் தர்மராஜ், தி௫மழிசை நாடார் சங்க தலைவர் அய்யாதுரை, பூந்தமல்லி நாடார் சங்க தலைவர் ஜெயகுமார், போ௫ர் நாடார் சங்க தலைவர் ஆனந்தராஜ், காமராஜர் நாடார் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பூமிநாதன், பாண்டிய நாடார் பேரவை தலைவர் க௫க்குவேல், தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகி ராஜாகனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.