அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற இளங்காமுடி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா ஆண்டு தோறும் தைமாதம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டும் நடத்த கிராமத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்தநிலையில் 10-க்கும் மேற்பட்ட மண்குதிரைகள் தயார் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பக்தர்கள் சார்பில் மண்குதிரைகளான புரவிகள் கொண்டு வரப்பட்டு ஊர் மந்தையில் வைக்கப்பட்டது. பின்னர் புரவிகள் மலர்களால் அலங்கரிக்கபட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் புரவி சிலைகள் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக முக்கிய தெருக்களில் ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது. திருவிழாவை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.