திசையன்விளை: முக கவசம் அணியாத 40 பேருக்கு அபராதம்
முக கவசம் அணியாத 40 பேருக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன் மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை காமராஜர் சிலை அருகில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாத 40 பேருக்கு அபராதமாக தலா ரூ.500 விதித்து வசூலித்தனர்.