வளர்ச்சி திட்டப்பணிகள்

கபிஸ்தலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-10 20:15 GMT
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். 
கலெக்டர் ஆய்வு 
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், கபிஸ்தலம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், சருக்கை கிராமத்தில் ரூ.26.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தையும், புதிதாக கட்டப்பட்டு வரும் பொது வினியோக திட்ட அங்காடி கட்டிட பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாற்றங்கால் பயிரிடும் பணிகளையும் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தொடர்ந்து சருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும், பள்ளி கட்டிடம் பாதுகாப்பு குறித்தும், கழிவறை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
திடக்கழிவு மேலாண்மை 
பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை முறையாக அகற்றுவது குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார். முன்னதாக கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தகம், பிரசவ அறை, அலுவலகம், படுக்கை வசதி மற்றும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை போன்ற அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தொடர்ந்து கபிஸ்தலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாயவிலை கடையில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்பாபு, காந்திமதி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கபிஸ்தலம் சுமதி குணசேகரன், சருக்கை ஜெகநாதன்,  கபிஸ்தலம் ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன், சருக்கை ஊராட்சி செயலாளர் குணசேகரன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்