ரோந்து போலீசார் வந்ததால் திருடர்கள் தப்பி ஓட்டம்
திருமயம் அருகே ரோந்து போலீசார் வந்ததால் திருடர்கள் தப்பி ஓடினார்கள்.
திருமயம்,
திருமயம் அருகே உள்ள கடியாபட்டியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் சென்னையில் தங்கி தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவருடைய வீட்டின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைக்க முயன்றனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் பக்கத்து வீட்டிற்கு திருட சென்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், திருமயம் இன்ஸ்பெக்டர் கவுரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.