கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி
கீழடியில் இன்று (வெள்ளிக்கிழமை) 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்படுகிறது. இந்த பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
திருப்புவனம்,
கீழடியில் இன்று (வெள்ளிக்கிழமை) 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்படுகிறது. இந்த பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
கீழடி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
8-ம் கட்ட அகழாய்வு
இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது.
இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கீழடியில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.
அகழாய்வு பணிக்கான தொடக்க விழா ஏற்பாடுகளை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அதிகாரிகள் செய்துவருகின்றனர்.