ஆவணம் இல்லாத ஆட்டோ, கார் உள்ளிட்ட 10 வாகனங்கள் பறிமுதல்

ராமேசுவரம் பகுதியில் ஆவணம் இல்லாத ஆட்டோ, கார் உள்ளிட்ட 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-02-10 18:51 GMT
ராமேசுவரம்,

ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி சேக் முகமது தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், மோட்டார் வாகன செயலாக்க பிரிவு ஆய்வாளர் பாத்திமா பர்வீன் உள்ளிட்டோர் ராமேசுவரம்-திட்டக்குடி சாலை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். .அப்போது ஆட்டோ, கார் உள்ளிட்ட  வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்தனர். அதில் சில வாகனங்களில் தகுதிச் சான்று இல்லாததுடன், வரி செலுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. 
இதை தொடர்ந்து ஆட்டோ, கார் உள்ளிட்ட 10 வாகனங்களை பறிமுதல் செய்து நகர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தியுள்ளனர். 



மேலும் செய்திகள்