வாக்குஎண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருக்கோவிலூர் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-02-10 18:12 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகராட்சிக்கான வாக்குஎண்ணும் மையம் சந்தைப்பேட்டையில் உள்ள திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அதே பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு, அங்கு குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என ஆய்வு செய்தார். 

முன்னேற்பாடு பணிகள்

அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் , தேர்தலின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் முன்னேற்பாடுபணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா, தாசில்தார் குமரன், தேர்தல் பார்வையாளர் சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்