17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய தாய் இறந்துவிட்டதால் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்த சூழலில் அவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், விசாரித்ததில் சிறுமி கூறிய தகவலை கேட்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சிறுமியை அவரது தந்தை கோவிந்தன் (வயது 44) மற்றும் அவரது நண்பரான வி.சாத்தனூரை சேர்ந்த கந்தகோணி என்கிற முனுசாமி (48) ஆகிய இருவரும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோவிந்தன், கந்தகோணி என்கிற முனுசாமி ஆகிய இருவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.