ராஜபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-02-10 17:25 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் முடங்கியார் சாலையில் பொன் விழா மைதானம் அருகே தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தலைமை வகித்தார்.போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உள்ளிட்டோர் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்ததை கண்டித்து கோஷமிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்