வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஒதுக்கீடு செய்யும் பணி
மயிலாடுதுறை நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்தது.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்தது.
வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கீடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 79 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த 79 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஒதுக்கீடு செய்யும் பணி மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் பார்வையாளரும், உதவி கலெக்டருமான பாலாஜி, தேர்தல் நடத்தும் அலுவலர் பாலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சின்னங்கள் பொருத்தும் பணி
இதில் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வார்டு, வாரியாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
வரும் சனிக்கிழமை எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.