மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி சசிகலா (வயது 60). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அலறித்துடித்த அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் சசிகலா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.