காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள பாப்பணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி சாந்தி (வயது 45). இவர் நோய்வாய்ப்பட்டு இருந்து வந்ததாகவும், இந்நிலையில் சாந்தி விஷம் குடித்து மயக்க நிலையில் கிடப்பதாக முனியாண்டிக்கு தகவல் கூறியதன் அடிப்படையில் சாந்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.