சேலம் புதிய பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்தவர் சிக்கினார்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்தவர் சிக்கினார்.
சேலம்:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் அகல்யா (வயது 18). கல்லூரி மாணவியான இவர் சேலம் கருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஈரோட்டில் இருந்து பஸ்சில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கு அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று மாணவியிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அவர் சத்தம் போட்டார். அப்போது அங்கிருந்த சிலர் துரத்தி சென்று மர்ம நபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் சென்னை எண்ணூரை சேர்ந்த மணிகண்டன் (28) என்பதும், மாணவியிடம் செல்போன் பறித்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.