பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி பாதையில் 4 குட்டிகளுடன் உலா வந்த புலி
பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி பாதையில் 4 குட்டிகளுடன் புலி உலா வந்தது.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கிறது. பந்திப்பூர் வனப்பகுதியில் வனத்துறை ஜீப்பில் சுற்றுலா பயணிகள் சபாரி அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பந்திப்பூர் வனப்பகுதியில் சபாரி பாதையில் ஒரு புலி, 4 குட்டிகளுடன் உலா வந்துள்ளது. இதனை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டில் புலி எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் பந்திப்பூர் வனப்பகுதியில் 4 குட்டிகளுடன் புலி ஒன்று உலா வந்தது வனத்துறையினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.