பெண்ணுக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
பேட்டையில் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேட்டை:
பேட்டை கருங்காடு ரோட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சாமுவேல் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் மகேஷ் (22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சாமுவேல், மகேசின் தாய் கிருஷ்ணம்மாளை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கிருஷ்ணம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர்.