ரூ.1¾ கோடியில் சாலை பணி

கஞ்சாநகரம் ஊராட்சியில் ரூ.1¾ கோடியில் நடந்து முடிந்த சாலை பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.

Update: 2022-02-09 18:51 GMT
திருவெண்காடு:
கஞ்சாநகரம் ஊராட்சியில் ரூ.1¾ கோடியில் நடந்து முடிந்த சாலை  பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் கஞ்சாநகரம் -  மங்கனூர் ஆளவேலி இணைப்பு சாலை ரூ.1¾ கோடியில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தடுப்பு சுவர், சிமெண்டு சாலை, 2 சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளையும், அதே ஊரில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, உதவி பொறியாளர் முத்துக்குமார், ஒப்பந்ததாரர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து கீழையூர், முடிகண்டநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்ற அவர் நெல் கொள்முதல் செய்யப்படும் பணிகளை பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்