ஓய்வுபெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.75ஆயிரம் பறிமுதல்

ஓய்வுபெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.75ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-09 18:28 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் நேற்று தேர்தல் பறக்கும்படை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனைச் செய்தனர். இதில் வேலூர் கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரியத்துறை செயற்பொறியாளர் (ஊழல் தடுப்பு பிரிவு) ராமச்சந்திரன் என்பவர் வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.75 ஆயிரத்து 660 கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்