திருவண்ணாமலையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-09 18:25 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணி வரன்முறை பாதுகாத்திட வேண்டும்.

 12 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்