விழுப்புரம்
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் டேவிட்லிவிங்ஸ்டன் (வயது 50). தொழிலாளியான இவர் சுவர் விளம்பரம் செய்வதற்காக நேற்று முன்தினம் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காணைகுப்பம் பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த கார், திடீரென அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த டேவிட் லிவிங்ஸ்டன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் பகுதியை சேர்ந்த முருகையன் என்பவர் மீது காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.