குடிபோதையில் பெண்ணை திட்டியவர் கைது
குடிபோதையில் பெண்ணை திட்டியவர் கைது செய்யப்பட்டார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). சம்பவத்தன்று இவர் தனது எதிர் வீட்டில் உள்ள திருப்பதி மனைவி தெய்வானை என்பவரிடம் குடிபோதையில் தகாத வார்த்தையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெய்வானை கொடுத்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.