கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு மீட்பு
கிணற்றில் விழுந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நயினார் முகமது. இவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் மலைப்பாம்பு விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் அங்கு சென்று கிணற்றில் இருந்து சுமார் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு எஸ்.புதூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை வாராப்பூர் அருகே உள்ள பூத்தக்கல் மலைப்பகுதியில் விட்டனர்.