கும்பாபிஷேக விழா

அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது.

Update: 2022-02-09 17:03 GMT
சிவகங்கை, 
காளையார் மங்களத்தில் உள்ள செல்வவிநாயகர் கோவில் மற்றும் பூ மாலை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்காக கோவில்களில் அனுக்ஞை, விநாயகர் பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொல்லங்குடி சந்திரன் சிவாச்சாரியார் மற்றும் அழுகச்சிபட்டி கணேச குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக விழாவை நடத்தி வைக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் முதன்மை ஆச்சாரியார் காரியப்பன் வாத்தியார் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்