பெண்ணை தாக்கிய விவசாயி கைது

நிலக்கோட்டை அருேக பெண்ணை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-09 16:20 GMT
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் சிமியோன் சேசுராஜ் (வயது 32). விவசாயி. அவருடைய மனைவி ரோஸ்மேரி. இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ரோஸ்மேரி கோபித்துக்கொண்டு, திண்டுக்கல் அருகே பெருமாள்கோவில்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் சிமியோன் சேசுராஜ், தனது மனைவியை தேடி அதே பகுதியில் வசிக்கும் ரோஸ்மேரியின் தங்கை அனிதா ஜோதியின் வீட்டிற்கு சென்றார். அப்போது ரோஸ்மேரியை எங்கே என்று அவரிடம் கேட்டார். அதற்கு ரோஸ்மேரி வெளியூர் சென்றுவிட்டதாகவும், இங்கு வரவில்லை என்றும் கூறினார். இதனை ஏற்க மறுத்த சிமியோன் சேசுராஜ், அனிதா ஜோதியை தாக்கினார்.
இதுகுறித்து அவர், நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிமியோன் சேசுராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்