என்ஜின் கவர் இன்றி பறந்த விமானம்; மும்பையில் பரபரப்பு
விமானம் சென்ற பிறகு, ஓடு தளத்தில் என்ஜின் கவரை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை குஜராத் மாநிலம் புஜ் பகுதிக்கு அலையன்ஸ் நிறுவன விமானம் ஒன்று புறப்பட இருந்தது. விமானத்தில் 70 பயணிகள் இருந்தனர். இந்தநிலையில் விமானம் புறப்பட்ட போது, அதன் என்ஜின் கவர் கழன்று விழுந்தது. இந்தநிலையில் விமானம் சென்ற பிறகு, ஓடு தளத்தில் என்ஜின் கவரை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் என்ஜின் கவர் இன்றி பறந்த விமானம், பத்திரமாக புஜ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் அதில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஆணையம் (டி.ஜி.சி.ஏ.) விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.