அரசு ஊழியர்களுக்கு துறை சார்ந்த தேர்வு

அரசு ஊழியர்களுக்கு துறை சார்ந்த தேர்வு

Update: 2022-02-09 14:14 GMT
ஊட்டி

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ஆண்டுதோறும் 2 முறை தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு ஊழியர்களுக்கு துறை சார்ந்த எழுத்துத்தேர்வு, ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய ஆண்டவர் மேல்நிலை பள்ளி ஆகிய 2 மையங்களில் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தேர்வு நடந்தது. இதை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பி.கிருஷ்ணகுமார், கலெக்டர் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

கணக்கு பிரிவில் இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்பட்டது. முதல் தாள் தேர்வு எழுத 82 பேர் விண்ணப்பித்தனர். 57 பேர் தேர்வெழுதினர். 25 பேர் வரவில்லை. 2-வது தாள் எழுத 49 பேர் விண்ணப்பித்தனர். 26 பேர் எழுதினர். 23 பேர் வரவில்லை. இதேபோல்மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை 2 மையங்களிலும் அலுவலக நடைமுறை தொடர்பான எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத 219 பேர் விண்ணப்பித்தனர். 165 பேர் எழுதினர். 54 பேர் வரவில்லை. 

மேலும் செய்திகள்