கல்லால் தாக்கி செல்போன் பறிப்பு; 3 பேர் சிக்கினர்
மதுரையில் கல்லால் தாக்கி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் ைகது செய்தனர்.
மதுரை
\மதுரையில் கல்லால் தாக்கி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் ைகது செய்தனர்.
செல்போன் பறிப்பு
மதுரை அவனியாபுரம் பராசக்தி நகரை சேர்ந்தவர் முகமதுசாதிக் (வயது 20). ஜவுளி கடை ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் விசுவா உடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். முனிச்சாலை, வாழைக்காய் பேட்டை அருகே சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் முகமதுசாதிக் மற்றும் அவரது நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டியது. அவர்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரையும் கல்லால் தாக்கி விட்டு செல்போனை பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பியது. இது தொடர்பாக முகமது சாதிக் விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெல்பேட்டை பகுதியை சேர்ந்த யாசர் அராபத் (21) மற்றும் 3 சிறுவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ரவுடி பட்டியலில் உள்ள யாசர் அராபத் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்த யாசர்அராபத் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.