பூங்காவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு- போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஈரோட்டில் உள்ள பூங்காவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-08 21:15 GMT
ஈரோடு
ஈரோட்டில் உள்ள பூங்காவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ஆர்.கே.வி.நகரில் சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பூமி பூஜை நடந்தது. பூங்கா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய   தகவல் கிடைத்ததும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு     விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட     பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்தநிலையில் பூங்காவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கட்டிடம் கட்டப்படுகிறது. 
இந்த பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்", என்றனர். அதற்கு அதிகாரிகள் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்