சித்திரை வீதியில் மீனாட்சி-சுந்தரேசுவரர்
சித்திரை வீதியில் மீனாட்சி-சுந்தரேசுவரர்
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளி வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பல நாட்களுக்கு பிறகு சுவாமி-அம்மன் கோவிலை விட்டு வெளியே வந்து சித்திரை வீதிகளில் காட்சி தந்ததால் தரிசிக்க பக்தர்கள் திரண்டு இருந்த போது எடுத்த படம்.