பால்வண்ணநாதர் கோவிலில் தை தெப்ப தேரோட்டம்
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோவிலில் தை தெப்ப தேரோட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் கோவில் உள்ளது. இது சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணை கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தை தெப்ப தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாள் கோவிலில் இருந்து சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து மாலையில் தெப்ப தேரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி தெப்பத்தேரில் எழுந்தருளினர். பின்னர் தெப்ப தேரோட்டம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் தெப்ப தேரில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.