வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-02-08 20:14 GMT
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள தெற்கு நரியங்குழி கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 45). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக சொல்லப்படுகிறது. மருத்துவமனைகளில் காண்பித்தும் வயிற்றுவலி தீராததால் மனமுடைந்த முருகன் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட குடும்பத்தினர் முருகனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் கைகல நாட்டார் தெருவை சேர்ந்தவர் சந்திரகாசன்(70). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்