வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சலவன்பேட்டையில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-08 18:51 GMT
வேலூர்

வேலூர் சலவன்பேட்டை பழனி ஆச்சாரி தெருவில் சிலர் வீடுகளில் ரேஷன் அரிசியை மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்துள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சத்தியமூர்த்தி, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ், குடிமைப்பொருள் சிறப்பு தனி வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் மற்றும் குழுவினர் நேற்று அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அருகருகே உள்ள சபாபதி, பாபு ஆகியோரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தெரியவந்தது. ஒரு வீட்டில் 23 மூட்டைகளும், மற்றொரு வீட்டில் 37 மூட்டைகளும் என மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து லாரி மூலம் வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்