வாணியம்பாடி அருகே வெடி பொருட்கள் கடத்தியவர் கைது. 103 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிளில் வெடிபொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 103 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிளில் வெடிபொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 103 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தால் பறக்கும்படை அமைக்கப்பட்டு வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் அம்பேத்கர் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த திருப்பத்தூர் கொடுமா பள்ளி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
வெடிபொருட்கள் கடத்தல்
மோட்டார் சைக்கிளில் அவர் கொண்டு சென்ற மூட்டையை சோதனை செய்தபோது அதில் வெடிமருந்துகள் இருந்துள்ளது. மொத்தம் 103 ஜெலட்டின் குச்சிகள் அதில் இருந்தது தெரியவந்தது. அதை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிரு செய்து ஜெலட்டின் குச்சிகளை கடத்திச் சென்றதாக ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.